இந்தியாவில் ‘முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இரயில்’- மும்பை டூ விசாகப்பட்டினம்…!
இந்தியாவின் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இரயிலானது ஆக்சிஜன் நிரப்ப,மும்பையிலிருந்து விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றானது நாடு முழுவதும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.கடந்த ஒரே நாளில் 2,56,947பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.கொரோனா வைரஸினால் மிகக் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால்,ஆக்சிஜன் சிலிண்டர் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.மத்திய அரசானது, ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்தாலும்,பல மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேர்வதில் காலதாமதம் ஆகிறது.இதன் காரனமாக,மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இரயில்வே துறையின் உதவியை நாடியுள்ளன.இந்த கோரிக்கையை ஏற்றுகொண்ட ரயில்வே துறை தனது முதல் ஆக்சிஜன் ரயில் சேவையை மும்பையில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி இயக்குகிறது.
இதைப்பற்றி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில்,”மும்பையின் கலாம்போலி ரயில் நிலையத்திலிருந்து 7 காலி கண்டெய்னர் லாரிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுள்ளது.விசாகப்பட்டினத்தில் ஸ்டீல் அலையில் இருந்து,இந்த 7 கண்டெய்னர் லாரிகளிலும் திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு,ரயில் மீண்டும் மும்பை திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலானது தனது இலக்கை அடையும் வரை இடையில் எங்கும் நிறுத்தப்படாது”,என்று கூறியுள்ளார்.