காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் சங்கேத் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து.
இங்கிலாந்தில் காமன்வெல்த் சர்வதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்குதல் போட்டியில் 55 கிலோ ஆடவர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சங்கேத் சர்கார் கலந்துகொண்டார். இவர் 248 கிலோ தூக்கி வெள்ளி புத்தகம் வென்றார். பளுதூக்கும் வீரர் சங்கேத் சர்கார் காயம் இருந்தபோதிலும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
மேலும், ஆடவருக்கான 55 கிலோ பளு தூக்குதல் போட்டியில் மலேசியாவின் அனிக் கஸ்டன் 249 கிலோ தூக்கி தங்கம் வென்ற நிலையில், இலங்கையின் திலங்க குமார 225 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த சங்கேத் சர்காருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் சங்கேத் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், சங்கேத் சர்காரின் சிறப்பான முயற்சி!, சங்கேத் சர்கார் வெள்ளி பதக்கம் வென்றது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு சிறப்பான தொடக்கமாகும். வெள்ளி பதக்கத்தை பெற்று தந்த சங்கேத் சர்காருக்கு வாழ்த்துக்கள் என்றும் அவரின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…