கொரோனா வைரசால் ஒரு வருடம் தாமதமாகும் ககன்யான் திட்டம் -சிவன் தகவல்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக விண்வெளிக்கு மனிதன அனுப்பும், இந்தியாவின் ககன்யான் திட்டம் ஒரு வருடம் தாமதமாகிவிடும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு நாங்கள் இதற்கான இலக்கை வைத்துள்ளோம் என்றும் சிவன் கூறியுள்ளார்.முதலாவதாக டிசம்பர் 2020 ஆண்டில் இந்த திட்டத்தை முடிக்க முடிவு செய்யப்பட்டது. இரண்டாவதாக 2021-ஆம் ஆண்டில் ஜூன் மாதமும்,மூன்றாவதாக 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் பயணம் செய்ய திட்டமிடப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் இந்தியா தனது 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடுவதற்கு முன்பு ஒரு இந்திய விண்வெளி வீரர் விண்வெளிக்கு அனுப்பப்படுவார் என்று பிரதமர் தனது 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார்.2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இஸ்ரோவால் திட்டமிட்டிருந்த பிற பயணங்களும் கொரோனா காரணமாக தாமதமாகியுள்ளது.
வீட்டிலிருந்தபடி விண்வெளி செயல்பாடுகளை செய்ய முடியாது. விண்வெளி பொறியியலாளர்கள் ஒவ்வொருவரும் ஆய்வகங்கள், தொழில்கள், ஒருங்கிணைப்பு பகுதிகள் மற்றும் துறைகளில் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு பொறியாளரும்,தொழில்நுட்ப வல்லுநரும், தொழில்நுட்ப உதவியாளர் என அனைவருமே வெவ்வேறு மையங்களிலிருந்து வந்து ஒரு துவக்கத்திற்கு ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வன்பொருள் SHAR (ஏவுதளம்) -க்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று சிவன் கூறியுள்ளார். இந்த ஆண்டின் முதல் ராக்கெட் நவம்பர் 7-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
பி.எஸ்.எல்.வி அடுத்ததாக ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவும் என்றும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.இஸ்ரோ 2020 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2021 தொடக்கத்தில் நிலவுக்கு ஒரு லேண்டர்-ரோவர் மிஷனை அனுப்பவும் இருந்தது.”சந்திரயான் -3 ஏவுவதற்கான அட்டவணையை நாங்கள் இன்னும் தயார் செய்யவில்லை ” என்று சிவன் கூறியுள்ளார்.