இந்தியாவின் முதல் இலவச WiFi விமானம்.. விஸ்டாரா நிறுவனம் அறிவிப்பு.!
இந்திய விமான சேவையான விஸ்டாரா தனது வாடிக்கையாளர்களுக்கு விமானத்தில் வைஃபை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய விமான சேவையான விஸ்டார முதன் முதலில் திட்டமிடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானத்தில் வைஃபை இணைய இணைப்பை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை, தனது போயிங் 787-9 ட்ரீம்லைனர் என்ற விமானத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அறிமுக சலுகையாக, இந்த சேவையை அனைத்து விஸ்டாரா வாடிக்கையாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இலவசமாக வழங்குவதாக கூறியுள்ளது. இதற்கிடையில், ஒழுங்குமுறை ஒப்புதலுடன் விஸ்டாரா தனது ஏர்பஸ் ஏ 321 நேயோ விமானத்திலும் இந்த சேவையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சேவைக்கான கட்டண திட்டங்களை உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று விஸ்டாரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.