குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுங்கன்று.! ‘கங்கா’ என பெயர் சூட்டல்…
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் ‘கிர்’ ரக பசுங்கன்றுக்கு “கங்கா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (NDRI) விஞ்ஞானிகள் நாட்டின் முதல் கிர் ரக பசுங்கன்றுவை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த கன்று மார்ச் 16 அன்று பிறந்தது, தற்போது இந்த பெண் கன்றுக்கு கங்கா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிறக்கும் போது கன்றின் எடை 32 கிலோவாக இருந்ததாகவும், இப்பொது இந்த கன்று நல்ல உடல்நலத்துடன் வளர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். கிர் மற்றும் சாஹிவால் ஆகிய இரு மாட்டினங்களை குளோனிங் செய்து இதை, தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனம் 2009 இல் உலகின் முதல் குளோன் செய்யப்பட்ட எருமையையும் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.