இந்தியாவில் முதல் மற்றும் உலகில் 10வது புதிய ரத்த வகை கொண்ட நபர் குஜராத்தில் கண்டுபிடிப்பு

Default Image

மனித இரத்தக் குழுக்கள் ஏ, பி, ஓ மற்றும் ஏபி என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதை தவிர தனித்துவமான ஒரு ரத்த வகை குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள 65 வயதான இருதய நோயாளியின் தனித்துவமான இரத்த வகை EMM நெகட்டிவ் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் 9 பேர் மட்டுமே இத்தகைய அரிதான இரத்தக் வகையைக் கொண்டுள்ளனர், ஆனால் இப்போது, ​​குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த 65 வயதுடைய இந்த முதியவரும் EMM இரத்த வகையுடையவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, மனித உடலில் 4 வகையான இரத்தக் குழுக்கள் காணப்படும், இதில் A, B, O மற்றும் Rh போன்ற 42 வகைகளும் அடங்கும். மேலும் அவற்றில் கூடுதலாக 375 வகையான ஆன்டிஜென்கள் இருப்பதால், அதில் EMM அதிகமாக இருக்கும்.

எனவே, இரத்தத்தில் EMM குறைவாக காணப்படுவதால், இது மாதிரி இரத்த வகைகளுக்கு உலகளாவிய இரத்தமாற்ற சங்கம் (ISBT) EMM நெகட்டிவ் என்று பெயரிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்