பெரிய நாடுகளின் விவசாயிகளுக்கு கிடைக்கும் நவீன வசதிகள் இந்திய விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும், இதை இனி தாமதப்படுத்த முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் நலத்திட்ட மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றி வருகிறார்.அப்பொழுது அவர் பேசுகையில்,விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் கொண்டுவந்த சீர்திருத்தங்களை பார்த்து எதிர்க்கட்சிகள் கவலை அடைந்து விட்டன. யாரெல்லாம் விவசாயிகளை புறம் தள்ளினார்களோ அவர்கள் தான் தற்பொழுது இந்த மோசமான அரசியலை செய்து வருகின்றனர்.விவசாயிகளின் தற்கொலைகளை இந்த புதிய வேளாண் சட்டங்கள் தடுக்கும்.
நாங்கள் விவசாயிகளுக்கு உதவி வருகிறோம். எங்களைப் போலவே விவசாயிகளுக்கு உதவி செய்ய எதிர்க்கட்சிகளை எது தடுக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.எதிர்க்கட்சிகளால் வாக்குறுதிகளை மட்டுமே தர முடியும். ஆனால் ஆளும்கட்சி மட்டும்தான் அதை நிறைவேற்றும். இந்தியாவின் விவசாயிகள் இனி பின்தங்கிய நிலையில் வாழ முடியாது. பெரிய நாடுகளின் விவசாயிகளுக்கு கிடைக்கும் நவீன வசதிகள் இந்திய விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும், இதை இனி தாமதப்படுத்த முடியாது என்று பேசியுள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…