” இந்தியாவின் பொருளாதாரம் மூன்று செயல்களால் அழிக்கப்பட்டுள்ளது ” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் பேசிய நிதியமைச்சர், நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் என்றும் மாநிலங்களுக்கு உதவும்படி ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தும் எனவும் கூறினார்.
மேலும் கூறுகையில், ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து மாநிலங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க ஆலோசிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.குறிப்பாக கொரோனா என்பது கடவுளின் செயல், ஜிஎஸ்டி வசூல் கொரோனா காரணமாக பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,” இந்தியாவின் பொருளாதாரம் மூன்று செயல்களால் அழிக்கப்பட்டுள்ளது “. முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அழிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக தவறான சரக்கு மற்றும் சேவை வரிக் கொள்கையால் அழிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையை தவறாக பயன்படுத்தியது .இவை மூன்றால் பொருளாதாரம் அழிந்தது என்று பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…