இந்திய தகவல் தொடர்பு துறைக்கு உதவிய AI டெக்னாலஜி.! 36 லட்சம் போலி சிம் கார்டுகள் துண்டிப்பு.!

இந்திய தகவல் தொடர்பு துறை(DoT) AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 36 லட்சம் போலி சிம் கார்டுகளை கண்டறிந்து அவற்றை துண்டித்துள்ளது.
இந்திய தகவல் தொடர்பு துறையான DoT (Department of Telecommunications) போலி சிம்கார்டுகள் மூலமாக நடக்குக்ம் மோசடிகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பத்தை பயன்படுத்தி ASTR எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது.
இந்த தொழில்நுட்பம் மூலமாக, சிம் கார்டுகளின் ஆதாரங்களை / அடையாளங்களை சரிபார்த்து அவற்றில் சந்தேகத்தின் பெயரில் உள்ளதை துண்டிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது. இந்த AI – ASTR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 40.87 லட்சம் சிம் கார்டுகள் சோதனை செய்யப்பட்டன.
அதில், 36.61 லட்சம் மொபைல் SIM இணைப்புகள் போலி என கண்டறிந்து, அவற்றை DoT துண்டித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 12,34,111, ஹரியானாவில் 5,24,287, பீகார் ஜார்கண்ட்டில் 3,27,246, மத்தியப் பிரதேசதத்தில் 2,28,072 மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 2,04,658 போலி சிம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள், குஜராத், அசாம், பஞ்சாப், உத்தரகாண்ட், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.