இந்தியாவின் கொரோனா தடுப்பூசி – இரண்டு நாட்கள் நான்கு மாநிலங்களில் ஒத்திகை!
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று மற்றும் நாளை நான்கு மாநிலங்களில் நடைபெறுகிறது.
கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் தனது வீரியத்தை குறையாமல் காட்டிக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் தாக்கம் இந்தியாவில் சற்றே குறைந்து உள்ளது என்றே கூறலாம். இருப்பினும் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டே உள்ளது. பல இடங்களில் அவசரகால பயன்பாட்டிற்கான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு கொண்டும் உள்ளன.
இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கியுள்ள இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தற்போது ஓரளவுக்கு முடிவடைந்து விட்டது என்றே கூறலாம். இந்நிலையில் இன்று மற்றும் நாளை அதாவது டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் உள்ள அசாம் ஆந்திரா, குஜராத், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் இந்த தடுப்பூசிக்கான ஒத்திகை நடவடிக்கை நடைபெற உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கான அங்கீகாரம் கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.