ஒன்றாக இணைந்து , கொரோனாவை வெல்வோம் – பிரதமர் மோடி அழைப்பு

Default Image

ஒன்றாக இணைந்து , கொரோனாவை வெல்வோம் என ட்விட்டரில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் 68,35,655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 58,27,704 பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை  9,02,425 ஆக உள்ளது.1,05,526 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை தடுக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பல்வேறு விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் பிரதமர் மோடி  கொரோனா தடுப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் , “ஜன் அந்தோலன் ” என்ற   விழிப்புணர்வை தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். முககவசம் அணிய வேண்டும். கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ‘6 அடி தூர இடைவெளியை’ பின்பற்ற வேண்டும் . ஒன்றாக இணைந்து, நாம் வெற்றி பெறுவோம். ஒன்றாக இணைந்து , நாம் கொரோனாவை வெல்வோம். #Unite2FightCorona என்று பதிவிட்டுள்ளார்.பிரதமரின் இந்த பதிவை தொடர்ந்து பலரும் #Unite2FightCorona  என்ற ஹேஷ் டேக்கில் கொரோனாவை விரட்டுவோம் என்று தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்