” பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுப்பு ” இந்தியா அதிரடி நடவடிக்கை…!!
- காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தான் நாட்டை சேந்த இரண்டு தூப்பாக்கிசுடு வீரக்கள் இந்தியாவில் பங்கேற்கும் போட்டியில் அனுமதிக்க இந்தியா விசா வழங்க மறுத்துள்ளது.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இந்திய ஆதரவு நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக உலகக்கோப்பை சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் கடந்த 20ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது.இப்போட்டியில் 25 மீட்டர் துப்பாக்கிசுடு போட்டியில் பங்கேற்க இருந்த இரண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.