நம்பர் 1 இடத்தைப் பிடித்த இந்தியர்கள்..!

Default Image

உலகிலேயே அதிக நேரம் உழைப்பவர்கள் இந்தியர்கள் என்றாலும், அவர்களுக்கான சம்பளம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது.

சுவிஸ் பேங்க் யுபிஎஸ் (UBS) எனும் ஆய்வு, உலகளவில் 77 நகரங்களில் அதிக நேரம் உழைப்பவர்களையும், அவர்களது ஊதியத்தையும் ஒப்பிட்டு ஆய்வு நடத்தியது.

அதில் பிற நாடுகளில் ஒரு மனிதன் சராசரியாக ஆண்டுக்கு ஆயிரத்து 987 மணி நேரம் வேலை செய்யும் நிலையில், இந்தியாவின் கேட்வே என அழைக்கப்படும் மும்பையில் ஒருவர் சராசரியாக 3 ஆயிரத்து 314 மணி நேரம் வேலை செய்வதாக தெரிவித்துள்ளது.

அதேசமயம், நியூயார்க்கில் ஒருவர் தமக்குத் தேவையான ஐபோன் எக்ஸ் வாங்க வேண்டுமெனில் 54 மணி நேரம் உழைத்தாலே போதும் என்றும், ஆனால் மும்பையில் ஐபோன் எக்ஸ்-கான விலையை ஈடு செய்ய ஒருவர் 917 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. இதேபோல் வீட்டு வாடகை ஆண்களுக்கான சிகை திருத்தம், ஆகியவற்றையும் அந்த ஆய்வு ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்