இந்தியர்கள் முதலில் முக்கியம் – ராகுல் காந்தி ட்வீட்.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் எதிர்கால மருந்து தேவையை புரிந்து சில மருந்துகளுக்கு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முன்வர வேண்டும் என்றும் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதித்தால் பாராட்டு, இல்லையென்றால் பதிலடி என டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. இதனை மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளை ஏற்றுமதி செய்யப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மருந்து ஏற்றுமது விவகாரத்தை அரசியலாக்க விருப்பவில்லை எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ராகுல்காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், இந்தியா அனைத்து நாடுகளுக்கும் உதவ வேண்டும். ஆனால் உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் நட்பு என்பது பதிலடி குறித்தது அல்ல என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு குறித்து ராகுல்காந்தி ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
Friendship isn’t about retaliation. India must help all nations in their hour of need but lifesaving medicines should be made available to Indians in ample quantities first.
— Rahul Gandhi (@RahulGandhi) April 7, 2020