லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் – விடுவிக்க 20,000 கேட்டு மிரட்டல்!
லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள், விடுவிக்க வேண்டுமானால் 20,000 வேண்டும் என கேட்டு மிரட்டல்.
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள குஷிநகர் மாவட்டத்தில் உள்ள முன்னா என்பவருக்கு தந்தை இல்லாத நிலையில் இவர் தனது தாய் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பசந்த்பூர் எனும் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் லிபியாவுக்கு வேலைக்கு செல்வதாக டெல்லியை சேர்ந்த என்.டி எண்டர்பிரைசஸ் டிராவல் ஏஜென்சி மூலம் பணியாற்ற முன்னா சென்றுள்ளார். இவரது விசா செப்டம்பர் 13ம் தேதியே முடிவடைந்துள்ள நிலையில் இவர் கடைசியாக அன்றுதான் தனது குடும்பத்தினருடன் பேசியுள்ளார். செப்டம்பர் 17-ம் தேதி டெல்லிக்கு விமானம் மூலம் வருவதாக கூறிய அவர் மீண்டும் குடும்பத்தினருடன் பேசவும் இல்லை அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனவே 27ஆம் தேதி முன்னாவின் உறவினர் லல்லன் என்பவர் டெல்லிக்கு சென்று அவரை லிபியாவுக்கு அனுப்பிய டிராவல் ஏஜென்சியிடம் இதுகுறித்து விசாரித்த பொழுது, அவர் மட்டுமல்லாமல் அவருடன் சேர்த்து ஏழு இந்தியர்களை லிபியாவில் பயங்கரவாதிகள் கடத்தி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் பணிபுரிந்த நிறுவனங்கள் 20 ஆயிரம் டாலர் கொடுத்தால் தான் கடத்தி வைத்துள்ளவர்களை விடுவிப்போம் என பயங்கரவாதிகள் நிபந்தனை விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நிறுவனமும் தங்களை நம்பி வேலைக்கு சென்ற சென்றவர்களுக்காக அந்த பணத்தை பயங்கரவாதிகளிடம் கொடுக்கவும் ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து டெல்லி காவல் நிலையத்தில் முன்னா உறவினர் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்ததுடன் அவருடன் கடத்தப்பட்டுள்ள மீதமுள்ள தொழிலாளர்களையும் விடுவிக்கக் கோரியும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.