யூ-டியூப் மூலம் 6,800 கோடி சம்பாதித்து கொடுத்த இந்திய யூடியூபர்கள்.! வெளியான சூப்பர் ரிப்போர்ட்….

Published by
Muthu Kumar

யூ-டியூப் உள்ளடக்க(Content) உருவாக்குபவர்களின் மூலம் 7லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் 6,800 கோடி வருவாய் உருவாகிறது.

யூ-டியூப் கிரியேட்டர்கள் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் செழித்து வருகிறது, உள்நாட்டு யூ-டியூப் கிரியேட்டர்கள் மூலம் ஆண்டுக்கு 6,800 கோடி வருவாய் இந்திய உள்நாட்டு உற்பத்திக்கு(GDP) செல்கிறது மேலும் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகிறது என்றும் யூ-டியூப் இந்தியா தலைமை தயாரிப்பு அதிகாரி, நீல் மோகன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது யூ-டியூப், படைப்பாளிகளுக்கு ஃபேன்ஸ்களை மட்டும் உருவாக்கவில்லை அவர்களுக்கு இதன்மூலம் வருவாயையும் உருவாக்கி தருகிறது. படைப்பாளிகள் எங்கிருந்தாலும் அவர்கள் முதலில் தேடி வருவது யூட்யூப் ஆகத் தான் இருக்கும்.

யூ-டியூப் மூலம் சிறிய அளவிலிருந்து வருபவர்கள் மீடியாவிற்குள் எளிதாக நுழைகின்றனர். நாங்கள் இந்தியாவின் பல மொழிகளிலும் எங்களது தளத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறோம். படைப்பாளிகளுக்கும், பயனாளர்களுக்கும் பாதுகாப்பான தளமாகவே யூ-டியூப்பை நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்று நீல் மோகன் கூறியுள்ளார்.

யூ-டியூப் தளத்தில் என்ன நடக்கிறது என்பதில் அரசுக்கும் அக்கறை இருக்கிறது. எந்தவித தவறான தகவலும் யூ-டியூப் தளத்தில் பரப்புவதில்லை என்பதில் அரசாங்கத்திற்கும், எங்களுக்கும் மிகுந்த பொறுப்பு உள்ளது. நாங்கள் இதற்காக ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Posts

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்! 

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

31 minutes ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

1 hour ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

3 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

4 hours ago

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

4 hours ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

5 hours ago