இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

பல மல்யுத்த வீராங்கனைகள் மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக  மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரிஜ் பூஷன் சிங்  மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பருமான சஞ்சய் குமார் தேர்தலில் நின்றார்.

சமீபத்தில மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் முடிவு வெளியானது. இதில் சஞ்சய் குமார் வெற்றி பெற்றார்.  இதற்க்கு மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளின் எதிர்ப்பு தெரிவித்தனர். சஞ்சய் குமார் தலைவராக தேர்ந்தெடுத்தவுடன் சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். அதேபோல இந்திய மல்யுத்த வீரரும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பஜ்ரங் புனியா தனது  பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி அளிப்பதாக அறிவித்தார். இந்நிலையில், இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்