சூடானில் உள்நாட்டு போர்.! அமைதியை நிலைநாட்ட களமிறங்கிய இந்திய பெண் ராணுவ வீரர்கள்.!
ஐநா அமைதிப்படையில் இணைந்துள்ள இந்திய பெண் ராணுவ வீரர்கள் சூடான் நாட்டிற்கு சென்றனர்.
சூடான் நாட்டில் தற்போது உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐநா அமைதிப்படை சூடானில் களமிறங்கியுள்ளது. இந்த அமைதி படை அனைத்து இடங்களிலும் அமைதியை நிலைநாட்ட செயல்பட்டு வருகிறது.
இந்த ஐநா அமைதிப்படையில் இந்திய பெண்கள் ராணுவ படையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். சூடானில் களம்இறங்கிய ஐநா அமைதிப்படையில் இவர்களும் இணைந்துள்ளனர்.
ஐநா அமைதிப்படையில் உள்ள இந்திய பெண் ராணுவ வீரர்கள் அடங்கிய குழு சூடானில் உள்ள அபெய் நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றனர். அவர்களை ஐநா பாதுகாப்புப் படையினர் வரவேற்றனர்.