இந்தியா பதில் தாக்குதல் நடத்திய பால்கோட் கிராமத்தின் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியீடு!!
- பாகிஸ்தானின் பால்கோட் நகரத்தில் இந்திய விமானப்படை அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, அந்த இடத்தை அளித்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் தற்போது அரசியல் புயலைக் கிளப்பும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்த கடந்த இரண்டு வாரங்களில், பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய விமான படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. மேலும், அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சிப் பள்ளிகளை ஆயிரம் கிலோ குண்டுகள் வீசி அளித்ததாகவும் இந்திய விமானப்படை மற்றும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூறியது.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்ட பகுதியின் சேட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் செயல்படும் தனியார் சேட்டிலைட் நிறுவனம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் ஒரு சர்வதேச செய்தி நிறுவனம் ஆகும்.
இந்த புகைப்படத்தில் பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 4 ஆகிய இரண்டு நாட்களுக்கு இடைப்பட்ட பகுதியில் என்ன நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட பகுதியில் மார்ச் 25ஆம் தேதி எப்படி இருந்ததோ அதே போல் பெரிதாக எந்த வித சேதமும் இல்லாமல் மார்ச் 4ம் தேதியும் உள்ளது. இதனால் பாரதிய ஜனதா கட்சி கூறுவது போல் தாக்குதல் நடத்தியது சரியான இடத்தில் இல்லை என தற்போது செய்திகள் வந்துள்ளது.