#BREAKING: புதிய உச்சத்தில் இந்திய பங்குசந்தை..!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன. ஜோ பிடன் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இடைத்தேர்தலில் தோற்கடித்தார். அமெரிக்க தேர்தலில் உறுதியான முடிவுகள் வெளியான நிலையில், இந்திய பங்குசந்தையில் ஏற்றம் காணப்பட்டுள்ளது.
இன்று காலை சந்தை திறந்தவுடன், மும்பை பங்குச் சந்தை குறியீடு 673 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளுடன் வரலாற்று உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் 180 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 12,450 ஆக உயர்ந்தது.
வங்கி, நிதி சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக உயர்ந்தன. இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி ஆகியவற்றின் பங்குகள் கடுமையாக உயர்ந்தன.