காஷ்மீரில் காணாமல் போன இந்திய ராணுவ வீரர்..! அவரது காரில் ரத்தம் இருப்பதாக தகவல்..!

JavedAhmedWani

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காணாமல் போனதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் அச்சாதல் பகுதியில் வசிக்கும் ஜாவேத் அகமது வானி என்ற இந்திய ராணுவ வீரர் சனிக்கிழமை மாலை காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். லடாக் பகுதியில் பணியமர்த்தப்பட்ட இவர் விடுமுறையில் இருந்துள்ளார்.

அவர் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காகச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள பகுதிகளிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் தேடத் தொடங்கியுள்ளனர். அந்த தேடலின் பொழுது பரன்ஹால் கிராமத்தில் அவரது காரில் ஒரு ஜோடி செருப்புகள் மற்றும் இரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்பிறகு, காணாமல் போன ராணுவ வீரரைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவ வீரர் கடந்தப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும்,  ராணுவ வீரர் ஜாவேத் அகமது வானி கடத்தப்பட்டதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்