ஜலந்தரில் இந்திய அறிவியல் மாநாடு : பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் லவ்லி புரொஃபஷனல் பலகலைக்கழகத்தில் இன்று முதல் 7ஆம் தேதி வரை இந்திய அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. எதிர்கால இந்தியா- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பதை கருப்பொருளாக கொண்டு நடைபெறவுள்ள இந்த 5 நாள் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
அறிவியல் அறிஞர்கள் பங்கேற்பு :
மாநாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்கங்கள், நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மேலும் நமது நாட்டின் அறிவியல் அறிஞர்கள், இஸ்ரோ மூத்த அதிகாரிகளும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டின் துவக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், ஸ்மிருதி இரானி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.