இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு..!
ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றின் அமெரிக்க டாலர் விற்பனையால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வடைந்தது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றும் பிற நாட்டு கரன்சிகளுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இருந்ததும் இந்திய ரூபாய்க்கு ஆதரவு அளிக்கும் வகையில் இருந்தது.
அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகம் எளிதடைந்த நிலையில் இந்திய பங்கு சந்தையில் முதலீட்டாளர்களுக்கு சாதகம் ஏற்பட்டதனால் உள்ளூர் சந்தை ஏற்ற நிலையுடன் காணப்பட்டது.
இறக்குமதியாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களால் அமெரிக்க டாலருக்கு ஏற்பட்ட தேவையால் இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 12 பைசாக்கள் குறைந்து ரூ.68.12 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 16 மாதங்களுக்கு பின் 15 காசுகள் உயர்ந்து ரூ.67.97 ஆக இருந்தது.