இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து.
டெல்லியில் இன்று நாடாளுமன்ற அவையில் ரயில்வே துறைக்கு கோரப்படும் மானியங்கள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் பேசினார். அவர் பேசுகையில் இந்திய ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து.
ரயில்வே துறை இந்திய அரசிடம் தான் இருக்கும் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகளில் இணைந்து செயல்படும்போதுதான் நாடு அதிக வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பயணிகளின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்தில் விபத்து காரணமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. 2019 மார்ச் மாதம் கடைசியாக ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…