கடந்தாண்டு கொரோனவால் மார்ச் முதல் ஜூலை வரை முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யப்பட்டது. அதற்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
உலகளவில் கொரோனா பரவத்தொடங்கிய நிலையில், பல நாடுகளில் யாரும் எதிர்பார்த்திடாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு முற்றிலுமாக முடங்கியது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் விட்டுவைக்கவில்லை, இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, பேருந்து, ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின், கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்க தொடங்கியது.
இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் 21 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையிலான பயண காலத்தில், முன்பதிவு மையங்களில் வாங்கிய ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்து கட்டணத்தை திரும்பப்பெற மத்திய அரசு, பயண தேதியில் இருந்து 6 மாதம் கால அவகாசம் வழங்கியது. இந்த காலநீட்டிப்பானது, ஆறு மாத காலத்தில் இருந்து ஒன்பது மாதமாக நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
முன்பதிவு செய்த பயண தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு பின் பயணிகள், ரயில்வே மண்டல அலுவலகத்திலோ, TDR மூலமாகவோ அல்லது பொது விண்ணப்பம் மூலமாகவோ தாக்கல் செய்திருக்கலாம். அவ்வாறு முன்பதிவு மையங்களில் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு முழு கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, 139 என்ற எண் மூலமாகவோ, ஐ.ஆர்.சி.டி.சி. ஆப் அல்லது வலைத்தளம் மூலமாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், டிக்கெட்டுகளை முன்பதிவு மையங்களில் ஒப்படைப்பதற்கான காலவரம்பு, பயணம் செய்யும் தேதியிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…