குட் நியூஸ்: கொரோனாவால் உங்கள் ரயில் டிக்கெட் ரத்தானதா? பணத்தை திரும்ப பெற கால அவகாசம் நீட்டிப்பு!

Default Image

கடந்தாண்டு கொரோனவால் மார்ச் முதல் ஜூலை வரை முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யப்பட்டது. அதற்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

கொரோனாவும், ஊரடங்கும்:

உலகளவில் கொரோனா பரவத்தொடங்கிய நிலையில், பல நாடுகளில் யாரும் எதிர்பார்த்திடாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு முற்றிலுமாக முடங்கியது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் விட்டுவைக்கவில்லை, இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, பேருந்து, ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின், கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்க தொடங்கியது.

கால நீட்டிப்பு:

இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் 21 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையிலான பயண காலத்தில், முன்பதிவு மையங்களில் வாங்கிய ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்து கட்டணத்தை திரும்பப்பெற மத்திய அரசு, பயண தேதியில் இருந்து 6 மாதம் கால அவகாசம் வழங்கியது. இந்த காலநீட்டிப்பானது, ஆறு மாத காலத்தில் இருந்து ஒன்பது மாதமாக நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

திரும்ப பெரும் வழிமுறை:

முன்பதிவு செய்த பயண தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு பின் பயணிகள், ரயில்வே மண்டல அலுவலகத்திலோ, TDR மூலமாகவோ அல்லது பொது விண்ணப்பம் மூலமாகவோ தாக்கல் செய்திருக்கலாம். அவ்வாறு முன்பதிவு மையங்களில் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு முழு கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்களுக்கு பொருந்தும்:

அதுமட்டுமின்றி, 139 என்ற எண் மூலமாகவோ, ஐ.ஆர்.சி.டி.சி. ஆப் அல்லது வலைத்தளம் மூலமாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், டிக்கெட்டுகளை முன்பதிவு மையங்களில் ஒப்படைப்பதற்கான காலவரம்பு, பயணம் செய்யும் தேதியிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்