2030-க்குள் இந்திய ரயில்வே பசுமை ரயில்வே-யாக மாற்ற நடவடிக்கை!
2030-க்குள் இந்திய ரயில்வே பசுமை ரயில்வேயாக மாற்றப்படும்.
இந்திய ரயில்வே துறை, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ரயில்வே பாதைகளை மின்மயமாக்கல், ஆற்றலை சேமிக்கும் வகையில் ரயில் எஞ்சின்களையும், பெட்டிகளையும் மேம்படுத்துதல், ரயில் பெட்டிகளில் உயிரி – கழிவறைகளைப் பொருத்துதல், புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களுக்கு மாறுதல் மற்றும் கரிமில வாயுவை முற்றிலும் வெளியிடாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வேத் துறை மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து, தற்போது, இந்திய ரயில்வேத் துறை, 2030 ஆம் ஆண்டில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்காகவும், வெப்பமாதலை தவிர்ப்பதற்காகவும்,பசுமை ரயில்வே-வாக மாற்றுவது என்ற இலக்கை நோக்கி முனைப்புடன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.