அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை 200 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டம்.!
பண்டிகை காலங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வசதியாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை 200 சிறப்பு ரயில்களை இயக்கபோவதாக இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே வாரியத் தலைவர் யாதவ் கூறுகையில், மாநில அரசுகளின் தேவைகள் மற்றும் தொற்றுநோய்களின் நிலையைப் பொறுத்து தினசரி பயணிகள் ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக ரயில்வே முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
மேலும், அதிக தேவை உள்ள பாதைகளில் தேசிய டிரான்ஸ்போர்ட்டரால் அறிமுகப்படுத்தப்பட்ட குளோன் ரயில்களின் இயக்கப்படும் என்றார். தற்போது, வழக்கமான பயணிகள் ரயில்களையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 முதல் வழக்கமான ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.