சிறப்பு ரயிலில் செல்லுபடியாகாத டிக்கெட்டில் பயணம் செய்ததாக ஒரு குடும்பத்திற்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்த இந்தியன் ரயில்வே.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். பின் அரசு சிறப்பு ரயிலை இவர்களுக்காக இயக்கியது.
இதில், டெல்லியில் இருந்து 15 ஜோடி சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு கடந்த 11-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் புதுடெல்லி – பெங்களூரு சிறப்பு ஏசி ரயிலில் பயணித்த ஐந்து பயணிகளைக் கொண்ட ஒரு குடும்பம், செல்லாத டிக்கெட்டை பயன்படுத்தி பயணித்ததற்காக ரயில்வே நிர்வாகம் அவர்களுக்கு ரூ.32,000 அபராதம் விதித்தது. இந்த சிறப்பு ரயிலில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பிரேம் நரியன், கவுரவ் பால், ஜசாடா, நீரஜ் பால் மற்றும் ஜிதேந்தர் பால் ஆகியோர் புதன்கிழமை இரவு உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் செல்லாதது என கண்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அபராத தொகையை செலுத்தியதும், ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் அவர்களை விடுவித்தனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லி – ஜான்சி இடையே ஒரு பயணிக்கு ரூ.1,476 ரூபாய் வீதம் ஜிஎஸ்டி வரி உள்பட 5 பேருக்கும் ரூ.15,170. ஆனால், அவர்கள் ஐந்து பேரும் செல்லுபடியாகாத டிக்கெட்டில் பயணித்தனர். அதனால் அவர்களுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ரயில்வே விதிகளின் கீழ் பயணிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…