கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், மால்கள், திரையரங்குகள் மட்டுமின்றி நாட்டின் எல்லைகளும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், பெரிய நகரங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் தேவையில்லாமல் ரயில் நிலையங்களுக்கு மக்கள் செல்வதை தடுக்கும் வகையில் ரயில் பிளாட்பாரம் டிக்கெட் விலையை இந்திய ரயில்வே இரண்டும் உயர்த்திய்யது. இந்திய ரயில்வே நாள் ஒன்றுக்கு 13,523 ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நோய் தொற்றின் காரணமாக அனைத்து ரயில்களையும் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் இரயில்வே அமைச்சருடன் ஆலோசித்த அதிகாரிகள் காலியாக உள்ள ரயில்வே பெட்டிகளை கொரோனோ அவசர சிகிச்சை அளிக்கும் வார்டுகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் மருத்துவமனைகளுக்கு பயன்படும் வெண்டிலேட்டர், கட்டில்கள், டிராலிகள், மருத்துவமனைக்கு தேவைப்படும் உபகரணங்களை உற்பத்தி செய்வது குறித்து விவாதித்துள்ளனர். பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்க்கு இனங்க நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…