புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 642 சிறப்பு இரயில்களை இயக்கிய இந்திய இரயில்வே….
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கின் காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்க சிறப்பு இரயில்கள் மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வரை 642 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியுள்ளது. இந்த 642 ரயில்களும்,
- ஆந்திரப்பிரதேசம் (3 ரயில்கள்)
- பீகார் (169 ரயில்கள்),
- சட்டீஸ்கர் (6 ரயில்கள்),
- இமாச்சல் பிரதேசம் (1 ரயில்)
- ஜம்மு காஷ்மீர் (3 ரயில்கள்),
- ஜார்கண்ட் (40 ரயில்கள்),
- கர்நாடகா (1 ரயில்),
- மத்தியப்பிரதேசம் (53 ரயில்கள்),
- மகாராஷ்டிரா (3 ரயில்கள்),
- மணிப்பூர் (1 ரயில்),
- மிசோரம் (1 ரயில்),
- ஒடிசா (38 ரயில்கள்),
- ராஜஸ்தான் (8 ரயில்கள்),
- தமிழ்நாடு (1 ரயில்),
- தெலங்கானா (1 ரயில்),
- திரிபுரா (1ரயில்),
- உத்திரப் பிரதேசம் (301 ரயில்கள்),
- உத்ரகண்ட் (4 ரயில்கள்),
- மேற்கு வங்காளம் (7 ரயில்கள்),
என பல்வேறு மாநிலங்களில் உள்ள இரயில் நிலையங்களிலும் நிறுத்தப்பட்டன. ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்னர் அனைத்து பயணிகளுக்கும், முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பயணத்தின்போது பயணிகளுக்கு இலவச உணவும், குடிநீரும் வழங்கப்பட்டது.