44 வந்தே பாரத் விரைவு ரயில்களுக்கான டெண்டரை ரத்து செய்த இந்திய ரயில்வே .!

Default Image

ரயில்களுக்கு சென்னை பெரம்பூரில் உள்ள ஐ சிஎப் ஆலை ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிலையில், 44 வந்தே பாரத் ரயில்களுக்கான 704 பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப், ஆலைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி பெட்டிக்காக சில மின் உதிரி பாகங்களை வாங்க கடந்த டிசம்பரில் உலகளாவிய டெண்டரை ஐசிஎப் அறிவித்தது.

கடந்த மாதம் டெண்டரில் 6 நிறுவங்கள் கலந்து கொண்டனர். அதில், ஏலத்தில் பங்கேற்ற ஆறு நிறுவங்களில் ஐந்து நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், பாரத் இண்டஸ்ட்ரீஸ், சங்ரூர், எலக்ட்ரோவேவ்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் (பி) லிமிடெட், மேதா சர்வோ டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட், பவர்நெடிக்ஸ் எக்யூப்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்,

ஆனால், ஆறாவது நிறுவனமான சி.ஆர்.ஆர்.சி லிமிடெட் என்பது சீன அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்திய துணை நிறுவனத்துடன் இணைந்து  ஏலம் எடுக்கும் பணியில் பங்கேற்றது. இதனால், வந்தே பாரத் ரயில்களை தயாரிப்பதற்காக ஒரு சீன நிறுவனம் இணைந்து ஏலம் எடுத்ததற்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஐடி) கருத்து  தெரிவித்தது.

வர்த்தகர்கள் கூட்டமைப்பு  மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், அந்த டெண்டரை ரயில்வே துறை ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் புதிதாக டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே டெண்டர் ரத்து செய்யப்பட்டதன் காரணத்தை குறிப்பிடவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி அன்று புது தில்லி-வாரணாசி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து  துவங்கி வைத்தார். பின்னர், புதுடெல்லி மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோதேவி கத்ரா இடையே இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித் ஷா  கடந்த ஆண்டு அக்டோபர் 3 -ம் தேதி கொடியசைத்து  துவங்கி வைத்தார்.

டெண்டரில் 6 நிறுவங்களில் ஒரு சீன நிறுவனம் என்பது தெரியவந்ததால் தான் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்