முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகள் மொபைல் மூலம் எளிதில் பெற 12 ரயில் நிலையங்களுக்கு என தனி கியூஆர் குறியீடுகளை வடமேற்கு ரயில்வே அறிமுகப்படுத்தும் பணியில் களமிரங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸிருந்து தனிமனிதனை பாதுகாக்கும் நடவடிக்கையில் முன்னோட்டமாக ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு வடமேற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் புதிய முயற்சியாக முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை மொபைலில் இருந்து எளிதாக பெற கியூ-ஆர் கோடு முறையினை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து மொரோதாபாத் ரயில் நிலைய மேலாளர் தரூண் பிரகாஷ் கூறியதாவது:
டிக்கெட் பரிசோதனை செய்பவர்கள் கியூ-ஆர் கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலமாக டிக்கெட்டுகளை சரிபார்க்க துவங்கி உள்ளனர். முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதாக பெற 12 ரயில் நிலையங்களுக்கு என்று கியூ-ஆர் கோடுகளை அறிமுகப் படுத்தும் பணியை வடமேற்கு ரயில்வே ஒரு சில நாட்களுக்கு முன்னதாகவே துவங்கி விட்டது.
இதன்மூலமாக ஜெய்ப்பூர், அஜ்மீர், ஜோத்பூர், பிகானேர், அபு ரோடு, உதய்பூர் நகரம், துர்காபுரா, ஆல்வார், ரேவாரி, சங்கனேர், லல்கர், மற்றும் காந்திநகர் ஜெய்ப்பூர் ஆகிய நிலையங்களில் பயணிகள் காகிதமில்லாமல் முன்பதிவு செய்யப்படாத மொபைல் டிக்கெட்டுகளைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
முதலில் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து யுடிஎஸ் என்ற பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்த பின் பயனர் ‘பதிவு’ மற்றும் ‘உள்நுழைவு’ செயல்முறைகளை முடிக்க வேண்டும். பின்னர் உள்நுழைவை முடித்த பின் ‘புக் டிக்கெட்’ மெனுவில் உள்ள கியூ ஆர்-முன்பதிவைத் தேர்ந்தெடுத்து ரயில் நிலையத்தின் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பின்னர் கியூ-ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ததைத் தொடர்ந்து, டிக்கெட் பெறுவதற்கான மேல் நடவடிக்கைகளை துவங்க வேண்டும். என்று கூறி உள்ளார்.இவ்வசதியனது உடனே நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…