தாயையும் மகனையும் ஒன்று சேர்த்த இந்திய ரயில்வே துறை!
வடமாநிலத்தை சேர்ந்த சஷ்வாத் என்பவரது தாய் கடந்த 28-ஆம் தேதி கடந்த இரு தினங்களில் அஜ்மீர் எக்ஸ்பிரஸில் ரயில் பயணம் செய்துள்ளார். அந்த ரயில் கால தாமதமாக வந்ததால் சஷ்வந்த் தன் தாயை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.
உடனே தனது ட்விட்டர் பக்கத்தில், தனது தாய் அஜ்மீர் எக்ஸ்பிரஸில் பயணம் செய்து வருகின்றார். ஆனால், அவரை தற்போது என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆதலால் எனக்கு உதவி செய்யுங்கள் என தெரிவித்து, அந்த ட்விட்டரில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களையும், இந்திய ரயில்வே துறையும் டேக் செய்து பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கைகளை இந்திய ரயில்வே துறை மேற்கொண்ட பின்னர் சஷ்வத் இந்திய ரயில்வே துறை நன்றி தெரிவித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதன் பின்னர் இந்திய ரயில்வே துறை, பயணிகளை பாதுகாப்பாக உணர வைப்பதே ரயில்வே துறையின் கடமை. எனக் கூறி மேலும் ஒருவர் தனது தாயை தொடர்பு கொள்ள முடியவில்லைஎன கூறினார் . பின்னர், அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டு அந்த நபரை தாயுடன் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது