ரயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு இந்திய ரயில்வே துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேதுறையில் அதிகமான தொழிலாளர்களை கொண்ட ஒரு அரசு துறையாகும்.இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் ரயில்சேவையானது முடங்கியது.
தற்போதைக்கு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொருளாதார ரீதியில் அத்துறையானது பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்கவும், புது இடங்களை நிரப்புவதை நிறுத்தி வைக்கவும் பொது மேலாளர்களுக்கு டைரக்டர் ஜெனரல் ஆனந்த் எஸ் காதி, கடிதம் எழுதி உள்ளார்.
அதில், ரயில்வே துறையில் வேலை ஆட்கள் குறைக்கப் படுகிறார்களா..? என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆட்கள் குறைப்பு இருக்காது. அதேவேளையில் ரயில்வே சுயவிவரத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
ரயில்வே தற்போது 12,18,335 ஊழியர்களைக் கொண்டுள்ளது. அதன் வருமானத்தில் 65 சதவீதத்தை சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்த செலவிடுகிறது. மேலும், ஊழியர்களின் செலவைக் குறைப்பதன் மூலமும், பல பணிகளைச் செய்வதன் மூலமும் செலவினங்களைக் கட்டுப்படுத்த மண்டலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்யவும், எரிசக்தி நுகர்வு குறைக்கவும் மற்றும் நிர்வாக, பிற பகுதிகளில் செலவைக் குறைக்கவும் மண்டலங்களைக் கேட்டுக்கொண்டார்.
2018-ஆம் ஆண்டு முதல் ரயில்வே பாதுகாப்பு பிரிவில் 72,274 இடங்களும் மற்றும் பாதுகாப்பு அல்லாத பிரிவில் 68,366 இடங்களும் என மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1,40,640 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…