ரத்து செய்த ரயில் பயணக் கட்டணத்தை பெற்றுக்கொள்ள 45 நாட்கள் அவகாசம் அளித்தது இந்திய இரயில்வே…
கொவைட்-19 காரணமாக இரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் தங்களது டிக்கெட்டை ரத்து செய்ய நேரடியாக கவுன்டருக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய்ய அவசியம் இல்லை. அதற்கான கால அவகாசம் தற்போது 45 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி (நேற்று) மார்ச் 21 முதல் வரும் ஏப்ரல் 15 வரை ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் 45 நாட்களுக்குள் தங்களது பயண டிக்கெட்டை ஒப்படைத்துவிட்டு கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும். தொடர்ந்து ரயில்வே ரத்து செய்யாமல் , பயணியே தனது பயணத்தை ரத்து செய்தால் 30 நாட்களுக்குள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இது தற்போது 3 நாட்களாக வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எண் ‘139’ மூலம் ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கும் 30 நாட்களுக்குள் பயணக்கட்டத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேநேரம் இணையதளம் மூலம் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை திரும்பப்பெற தற்போதைய விதிமுறைகளே கடைப்பிடிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.