1,03,769 காலியிடங்கள்:- 20,734 பணியிடங்கள் அப்ரெண்டிஸ்க்கு ஒதுக்கீடு

Default Image

பயிற்சி பெற்றுவர்களுக்கு (அப்ரெண்டிஸ்) 1,03,769 காலியிடங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான தகவல் படி:

அப்ரெண்டிஸ் சட்டத்திருத்தின் படி, ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட 1,03,769 காலியிடங்களில் 20 %  காலியிடங்களான 20,734 காலியிடங்களை பயிற்சி பெறுவோருக்காக (அப்ரெண்டிஸ்) இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும்  2017 ம் ஆண்டு  மார்ச்சில் விலக்கப்பட்ட இவ்வதிகாரத்தை திரும்ப அளிக்க அப்ரெண்டிஸ் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
மேலும் திறந்தவெளி போட்டி இல்லாத நேரடி நியமனமானது அரசியல் விதிகளுக்கு புறம்பானது.அப்ரண்டிஸ் சட்டத்தில் 2016ல் செய்யப்பட்ட திருத்தத்தின் படி, தங்களது நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கும் கொள்கையை  ஒவ்வொருவரும் வகுக்க வேண்டும் என்று கூறுகிறது .
இதன் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 20% இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்