இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை 7 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் அலைவரிசைகளில் இன்று மாலை 7 மணியளவில் முதலில் இந்தியில் ஒளிபரப்பப்படும்.
இதனை அடுத்து ஆங்கிலத்தில் இவரது உரை ஒளிபரப்பப்படும். இதனை தொடர்ந்து தூர்தர்ஷனின் பிராந்திய மொழிகளில் ஜனாதிபதியின் உரை இரவு 9.30 மணியளவில் பிராந்திய அலைவரிசைகளில் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.
அதேபோல், இன்று இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்து புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதிபவனில் நடைபெறவுள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…