சீன அதிகாரிகள் மீது இந்திய பக்தர்கள் குற்றச்சாட்டு ..!
கைலாய மலைக்குப் புனிதப் பயணம் சென்ற பக்தர்கள், சீன அதிகாரிகள் தங்களை மானசரோவர் ஏரியில் புனித நீராடவிடவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சீனாவின் திபெத்தில் உள்ள கைலாய மலைக்கு இந்திய பக்தர்கள் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையுள்ள காலக்கட்டத்தில் சென்றுவர அனுமதிக்கப்படுகிறது.
உத்தரக்கண்ட் மாநிலத்தின் லிபுலேக் கணவாய் வழியாக ஏற்கெனவே சென்றுவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு முதல் சிக்கிம் மாநிலத்தின் நாது லா கணவாய் வழியாகவும் இந்தப் பயணம் நடைபெறுகிறது.
சீன எல்லைக்குள் சென்றதும் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகளைச் சீன அதிகாரிகள் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் மானசரோவர் ஏரியில் தங்களைப் புனித நீராடச் சீன அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என ஏற்கெனவே கைலாயமலைக்குப் பயணம் சென்றுவந்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.