நவம்பர் 1 முதல் சமையல் எரிவாயு பெறுவதில் புதிய நடைமுறை…
வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் சமையல் எரிவாயு பெறுவதில் புதிய நடைமுறையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டரை வீட்டில் விநியோகம் செய்யும் போது ஒரு முறை கடவுச்சொல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி சமையல் எரிவாயுவை விநியோகம் செய்யும் நபரிடம் ஓ.டி.பி எண்ணை கொடுத்தால் மட்டுமே கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் கேஸ் சிலிண்டரை அலைபேசி மூலம் பதிவு செய்யும் போதே அந்த எண்ணுக்கு ஓ.டி.பி வந்து விடும். அதனை கேஸ் விநியோகம் செய்ய வரும் நபரிடம் தெரிவிக்க வேண்டும்.இந்த புதிய நடைமுறையினால் கேஸ் சிலிண்டர் முறைகேடு மற்றும் உண்மையான நுகர்வோர்களை அறிந்து கொள்ள முடியும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.