இந்தியாவின் செவிலியருக்கு சிங்கப்பூரில் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது!

இந்திய வம்சாவளி செவிலியர் ஒருவருக்கு சிங்கப்பூரில் செவிலியர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து வருடம் தோறும் ஐந்து சிறந்த செவிலியர்களுக்கான ஜனாதிபதி செவிலியர் விருது வழங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வருடம் கொரோனா தொற்றின் போது சிறப்பாகவும் சுறுசுறுப்புடனும் பணியாற்றியதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த கலா நாராயணசாமி என்பவருக்கு இந்த ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது, அதில் ஒருவராக கலா நாராயணசாமியும் இடம்பெற்றுள்ளது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை என பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இவருக்கு 7,288 மதிப்புகள் கொண்ட அமெரிக்க டாலர்கள் பணமும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கலா நாராயணசாமி கூறுகையில், 2003 ஆம் ஆண்டில் வந்த சார்ஸ் நோய் தொற்று டன் போராடியதில் வந்த அனுபவம் தான் இந்த நோய் தடுப்பு நடவடிக்கையில் நான் சிறப்பாக பணி புரிய எனக்கு உறுதுணையாக இருந்தது எனக் கூறியுள்ளார்.