இந்திய ராணுவம் பூடான் நாட்டு ராணுவ வீரர்களுடன் இணைந்து கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி பூடான் நாட்டில் நடைபெற்றது. இதற்காக இந்திய விமானப்படை வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டருடன் பூடான் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் இந்திய விமான வீரரும், பூடான் நாட்டு ராணுவ வீரரும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் இந்திய ராணுவ வீரர் பயிற்சியளிக்க, பூடான் நாட்டு ராணுவவீரர் பயின்று கொண்டிருந்தார்.
வானில் இந்த பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக எதிர்பாராத விதமாக ராணுவ ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய ராணுவ வீரரும், பூடான் நாட்டு ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், தரையிறங்குகையில் இருந்த மோசமான வானிலை காரணமாகவும், மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் இறங்கும் இடம் தெரியாமல் மலையில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…