குட்நியூஸ்…2024-க்குள் காசநோய்க்கு எதிரான தடுப்பூசி – மருத்துவ வல்லுநர் சொன்ன தகவல்!
2024-க்குள் காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்று இந்திய மருத்துவ வல்லுநர் டாக்டர் சுசித் காம்ப்ளே தகவல்.
காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வரலாம் என எதிர்பாரக்கப்படுகிறது.அந்த வகையில்,இரண்டு நோயாளிகளுக்கு கட்டம்-3 (phase-3 clinical trials) மருத்துவ பரிசோதனைகள் 2024 இல் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.
TB தடுப்பூசி:
இது தொடர்பாக,புனேவில் உள்ள ICMR-National AIDS Research Institute (NARI) -இன் விஞ்ஞானி டாக்டர் சுசித் காம்ப்ளே கூறுகையில்,ஆரோக்கியமான குடும்பங்களில் காசநோயைத் தடுப்பதில் VPM1002 மற்றும் Immunovac ஆகிய இரண்டு TB தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான சோதனைகள் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
ஆறு மாநிலங்களில் சோதனை:
அதன்படி,காசநோயைத் தடுப்பதில் VPM1002 மற்றும் இம்யூனோவாக் தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான ஒரு கட்டம்-3, சீரற்ற, இரட்டை குருட்டு(double-blind),மருந்துப்போலி ஆகிய கட்டுப்படுத்தப்பட்ட சோதனை மகாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஒடிசா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் 18 இடங்களில் நடைபெறுகிறது ” என்றும்,இந்த சோதனைக்காக ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 12,000 பங்கேற்பாளர்களின் சேர்க்கை நிறைவடைந்துள்ளது மற்றும் அவர்களை கண்காணித்தல் 2024 வரை தொடரும் எனவும் காம்ப்ளே பிடிஐயிடம் தெரிவித்தார்.
2024 அல்லது 2025-க்குள் இது நிச்சயம்:
மேலும்,”விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தரவுகளின் பகுப்பாய்வுக்குப் பிறகு,இந்தத் தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து நாங்கள் முடிவுகளை எடுக்கிறோம். 2024 ஆம் ஆண்டளவில் அல்லது அதிகபட்சமாக 2025 ஆம் ஆண்டளவில் காசநோய்க்கு எதிராக இந்தியா ஒரு நல்ல, பயனுள்ள தடுப்பூசியைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்”,என்று கூறினார்.