திட்டமிட்டபடி இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறும்! – கோவா முதல் மந்திரி.
திட்டமிட்டபடி இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறும்.
இந்தியாவின் 51வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் வருகிற நவம்பர் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், இந்த விழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களும் இந்த திரையிடப்படும்.
மேலும் இந்த விழாவில், சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு விருதுகளும் வழங்கப்படும். இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளது.
இதானால், விளையாட்டு போட்டிகள், திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் பல்வேறு முக்கியமான நிகழ்ச்சிகள் நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவா முதல் மந்திரி இந்தியாவின் 51வது சர்வதேச திரைப்பட திருவிழா நடத்துவது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு நவம்பர் இறுதி வாரத்தில் திட்டமிடப்பட்டபடி, சர்வதேச திரைப்பட திருவிழா 2020 நடத்தப்படும் என்றும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அனைத்து நடைமுறைகளும் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.