என்றென்றைக்கும் கொண்டாடுவோம் சுதந்திர தினத்தை
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும்.ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி.இந்த நாளானது நம்முடைய புதிய தேசத்தின் உதித்த நாள் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஏனென்றால் இந்தியா என்பது இறையாண்மைக் கொண்ட நாடு ஆகும். இப்படி திகழும் நமது நாட்டின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கானோர் உயிரை தியாகம் செய்து கிடைத்தது ஆகும்.மேலும் இந்த சுதந்திரமானது ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்றும் சொல்லலாம்.
இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்தும் , நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.இதற்கு முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே ஆவார்கள்.
200 ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டனர்.இவர்கள் அனைவரும் இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்ற ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு ,தங்களது உயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை,ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம் என்பதை உறுதி ஏற்போம்…..