கடந்த சில நாட்களுக்கு இஸ்ரேலில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் வாட்ஸ் அப்பில் பலரது தகவல்களை உளவு பார்த்ததாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் தற்போது இந்தியாவில் இருந்து சுமார் 500 -க்கும் மேற்பட்டோரின் கூகுள் கணக்குளை இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஹேக்கர்கள் ஹேக் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் உலக முழுவதும் சுமார் 12,000 கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களுக்கு நடுவே இதுபோன்ற தகவல் திருட்டு நடந்துள்ளது. இந்த தகவலை கூகுள் நிறுவனத்தின் பிரச்சினைகளை ஆய்வு செய்யும் குழுவில் (Threat Analysis Group) உள்ள ஷேன் ஷன்ட்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் சுமார் 90 % க்கும் மேற்பட்ட ஹேக்கர்கள் கூகுள் நிறுவனத்தில் இருந்து இ -மெயில் (e-mail) வருவது போன்று தகவலை அனுப்புகின்றனர்.
கூகுள் என்பதற்கு பதிலாக “Goolge” என்று இந்த மெயில் (e-mail) இருக்கும். இதன்காரணமாக ஒருசிலர் இந்த “Goolge” வார்த்தையை சரியாக கவனிக்காமல் “Google” என்று நினைத்து தகவலை கவனக்குறைவால் தகவலை படித்து விடுவார்கள். மேலும் இந்த தகவலில் ஒரு லிங்க் (Link) வரும் நாம் அந்த லிங்கை கிளிக் (Cllick ) செய்ததும் அதன் மூலமாக அந்த கணக்கில் உள்ளவர்களின் பாஸ்வேர்ட் (Password) உள்ளிட்ட தகவல்களை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறனர். அப்போது அவர்களின் பணத்தை பறிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் இ -மெயில் (e-mail) பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக பயன்படுத்தும் படி கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…