குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்! பெயர் என்ன தெரியுமா?
CAA App: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான இணையதளம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் ‘CAA-2019’ என்ற செல்போன் செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.
Read More – தேர்தல் பத்திரங்கள்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த புதிய முக்கிய தகவல்
2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பொளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வழிசெய்கிறது. எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை.
Read More – மதுபான கொள்கை முறைகேடு..! முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கைது
இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பில் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் ‘CAA-2019’ செயலியை பதிவிறக்கம் செய்யலாம். குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2019-ன் கீழ் விண்ணப்பங்களைச் செய்வதற்கான ‘CAA-2019’ செயலி அதிகாரபூர்வமாக செயல்பாட்டுக்கு வருகிறது” என்றார்.