காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான் முடிவுக்கு இந்தியா பதிலடி

Published by
Venu

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய தூதரை  வெளியேற்ற முடிவு செய்த பாகிஸ்தான் அரசுக்கு  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் தரப்பில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது.அப்பொழுது அந்நாட்டு பிரதமர்  இம்ரான் கான் பேசுகையில்,காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்வோம்.இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சர்வதேச சமூகத்தின் முன் எடுத்துரைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.

இதற்கு பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் கூட்டம் நடைபெற்றது.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.இதில்  பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் ,வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி,முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில், பாகிஸ்தானில் உள்ள  இந்திய தூதரை வெளியேற்றவும்,இந்தியாவில் உள்ள தங்களது தூதரை திரும்ப பெறவும் முடிவு செய்யப்பட்டது.  இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை குறித்து மறு ஆய்வு செய்வது மற்றும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.  இந்தியா உடனான உறவுகள் தொடர்பாக பாகிஸ்தான் ஒருதலைபட்சமான முடிவு எடுப்பதாக அறிகிறோம். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்டவை இந்தியாவின் உள்விவகாரம்.இந்த விவகாரத்தில் யார் தலையிட முயன்றாலும் அவர்களின் முயற்சி வெற்றி பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago