தொலைந்து போ சீனா… இது இந்தியர்களின் பதில் என தைவான் அமைச்சர் கருத்து…
சீனாவில் இருந்து ஜப்பானின் கட்டுப்பாட்டில் சென்ற தைவான் தீவு கடந்த 1949 டிசம்பர் 10-ம் தேதி தனி நாடாக உருவானது.
இந்த நாளை தேசிய நாளாக தைவான் கொண்டி வருகிறது. இந்த ஆண்டுக்கான தைவானின் தேசிய நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாடங்கள் மற்றும் தைவானின் விடுதலை தொடர்பான தகவகல்கள் அடங்கிய விளம்பரங்கள் இந்திய செய்தித்தாள்களிலும், செய்தி ஊடங்களிலும் வெளியிடப்பட்டன. இதில், இந்திய செய்தி ஊடகங்கள் தைவான் தேசியநாள் கொண்டாட்ட தினத்தில் (செப்டம்பர் 10) சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளன.இந்நிலையில், இந்திய செய்தித்தாள்களில் தைவான் தேசியநாள் கொண்டாட்டங்கள் தொடர்பாக வெளியான விளம்பரங்களுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கு சீனாவிற்கு தைவான் வெளியுறவுத்துறை மந்திரி ஜோசப் வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோசப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சுதந்திரத்தை விரும்பும் மக்களையும், துடிப்பான ஊடகத்துறையையும் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆனால் கம்யூனிஸ்ட் சீனா தணிக்கை விதித்து இந்திய துணைக் கண்டத்திற்குள் அணிவகுத்துச் செல்ல விரும்புகிறது. இதற்கு தைவானின் இந்திய நண்பர்கள் ஒரு பதில் வைத்துள்ளனர். தொலைந்து போ! (சீனா)’ என தெரிவித்துள்ளார். லடாக் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இதனால், சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாகளமிறங்கியுள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.