தீவிரவாதத்தை இந்தியா பயன்படுகிறது.? பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதிலடி.!
இந்தியாவை விட வேறு எந்த நாடும் தீவிரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் கூறியதற்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐநா சபையின் பாதுகாப்புக் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆரம்பம் முதலே இந்தியா – பாகிஸ்தான் இடையே வார்த்தை போர் நிகந்து தான் வருகிறது. பாகிஸ்தான் , காஷ்மீர் பற்றி கூறுகையில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறுகையில், ஒசாமா பின்லேடனை மறைத்து வைத்தவர்களெல்லாம் காஷ்மீர் பற்றி பேசக்கூடாது என பதிலடி கொடுத்தார்.
இன்றும் அதே போல பாகிஸ்தான் பிரதிநிதி ஹினா ரப்பானி கூறுகையில், இந்தியாவை விட வேறு எந்த நாடும் தீவிரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தவில்லை என கூறினார்.
இதற்கு நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்னர், 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட ஹிலாரி கிளிண்டன் “உங்கள் கொல்லைப்புறத்தில் பாம்புகள் (தீவிரவாதிகள்) இருந்தால் அவை உங்கள் அண்டை வீட்டாரை (நாட்டை ) மட்டுமே கடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இறுதியாக அவை கொல்லைப்புறத்தில் யார் வைத்திருகிரார்களோ அவர்ளையும் கடிக்கும்.’ என ஹிலாரி கிளிண்டன் கூறியதை நினைவு கூறி, பாகிஸ்தான் அமைச்சர் ஹினாவுக்கு பதிலடி கொடுத்தார் மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர்.